Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு… பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

 

actress trisha shared shooting spot photo from mani ratnam ponniyin selvan

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் உள்ள ஆர்சாவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை திரிஷா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |