பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், பிரபு, பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் முதல் பாகம் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது நடிகை திரிஷா நடிக்கும் குந்தவை கதாபாத்திரத்திற்கு முதலில் கீர்த்தி சுரேஷை தான் இயக்குனர் தேர்வு செய்துள்ளார். ஆனால் அண்ணாத்த படத்தில் கமிட்டாகி இருந்ததால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் மறுத்துவிட்டார்.