Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் உங்கள் சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா…? நடிகர் கார்த்தி ஓபன் டாக்…!!!!

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இவர் நடித்த பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த கார்த்தி  சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். அதன் பின் மெட்ராஸ்,தோழா, தீரன், கைதி என தரமான கதைகளங்களைக் கொண்ட படங்களை நடித்து வெற்றி கண்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடம் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மணிரத்தினத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

மணிரத்தினம் இயக்கிய கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்திய தேவன் எனும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இதனை அடுத்து மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார் இந்த படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தைப் பற்றி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி உள்ளார் கார்த்தி அப்போது அவரிடம் பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் உங்கள் சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களா என ஒரு நிபுணர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த கார்த்தி எனக்கும் சம்பளத்தை உயர்த்த ஆசை இருக்கு ஆனால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தால் போதும் என ஆசைப்படுகின்றேன். மேலும் நான் சம்பளத்தை விட எனது அண்ணன் சூர்யாவை போல பல விருதுகள் வாங்க தான் ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |