Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று பிழைகள்?…. தொடரும் விவாதம்….!!!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சென்ற மாதம் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. அவ்வாறு வெளியான நாள் முதல் இன்று வரை இந்த படம் பற்றிய விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் வரலாற்று பிழைகள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

கள்ளழகர் வழிபாடு:

ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்களின் படைகள் ராஷ்டிரகூடர்கள் உடன் போர் புரியும் காட்சிகளில் இருந்து தான் பொன்னியின் செல்வன் படம் துவங்கும். போரில் வெற்றி அடைந்த உடன் ஆதித்த கரிகாலன்(விக்ரம்) உடன் வந்தியத்தேவன்(கார்த்தி) சந்திக்கும் காட்சி படத்தில் இடம்பெற்று இருக்கும். இந்நிலையில் வந்தியத்தேவன் குடித்திருப்பார். ஆதித்த கரிகாலனிடம், போரே முடித்துவிட்டு அப்படியே கள் அழகருக்கு ஒரு பூஜை என்று வந்தியத்தேவன் கூறுகிறார்.

உண்மையிலேயே கள் அழகர் வழிபாடு என்பது அதற்கு பிற் காலத்தில் நாயக்கர் காலத்தில்தான் உருவாகி இருக்க வேண்டும். மதுரை நகருக்கு அருகிலுள்ள அழகர் மலையில் பெருமாள் கோவில் இருக்கிறது. அது மிகவும் பழமையான கோவில் என்பதற்கான சான்றுகள் சிலபதிகாரம், பரிபாடல் ஆகிய இலக்கியங்களில் இருக்கிறது. அதன்படி அது ஒரு அழகர் கோவில் ஆகும். அதன்பின்னர் தான் அது கள் அழகர் ஆக மாறியது. அதற்குரிய ஒரு வரலாறு இருக்கிறது.

ஆதித்த கரிகாலன் கிபி 971 ஆம் வருடத்தில் இறந்து விட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகிறது. ஆனால் கள் அழகர் வழிபாடு என்பது சோழர்கள் காலத்துக்கு பின் உருவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக விஜயநகர பேரரசு காலம் அல்லது நாயக்கர் காலம். அதன் காரணமாக ஏன் முன்கூட்டியே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற ஐயம் எழுகிறது. வந்தியத்தேவன் சொல்வதை கள்- அழகர் என தனித்தனி வார்த்தைகளாக அர்த்தப்படுத்தி மது அருந்துவதை சொல்வதாக எடுத்துக் கொண்டாலும், அழகரை வழிபடும் வழக்கம் சோழர்களின் சிற்றரசுகளில் கிடையாது என்பதால் இதுவும் முரணை எழுப்பியே நிற்கிறது.

Categories

Tech |