Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரம்”…. விக்ரம் ஓபன் டாக்….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார் விக்ரம்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் பேசியபோது விக்ரம் கூறியதாவது, இத்திரைப்படத்தில் கார்த்தி நடித்த வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் தான் விஜய் நடிப்பதாக இருந்தது. ஜெயம் ரவி நடித்த அருண்மொழிவர்மன் கதாப்பாத்திரத்தில் தான் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்தது. முதலில் இருந்து ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நான் தான் நடிப்பதாக இருந்தது என கூறியுள்ளார்.

Categories

Tech |