தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தமிழ் மற்றும் இந்தியத் திரைத்துறையில் எழுத்தாளராகவும் சில வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லேகா நிறுவனம் வழங்க உள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் “பொன்னி நதி” என்ற முதல் பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியது. ஏ.ஆர். ரகுமான் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.