Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பொன்னான பலன் தரும்…பொன்னாங்கன்னி கீரை…!!

பொன்னாங்கன்னி கீரையின் அற்புதமான பலன்கள்:

பொன்னாங்கன்னி கீரையை சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை நீங்கி உடலைத் தேற்றும் வலிமை கொண்டது.

மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் தன்மை பொன்னாங்கன்னி கீரையில் இருக்கு. பாண்டு மூலம் கபம், சளி, ரோகங்களை குணப்படுத்தும். வரட்டு சளி மற்றும் இருமலைப் போக்கும்.

பொன்னாங்கன்னி கீரை, உடல் சூட்டை முற்றிலுமாக சமன்படுத்தும். கண் சம்பந்தமான மாலைக்கண் நோய், நீர் வடிதல், கண் எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தி திரும்பவும் வராமல் தடுக்கும்.

பொன்னாங்கன்னி கீரையை தினசரி உணவில் எடுத்து கொண்டால் மேனி பளபளப்பாக இருக்கும். வாய் நாற்றம், வயிற்று எரிச்சல் தீரும். வெள்ளைப்படுதல், ஈரல் நோய்கள் குணமாகும். இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பொன்னாங்கன்னி கீரையை தினசரி உணவில் எடுத்து கொண்டால் எளிதில் பலனளிக்கும் .

பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்ச்சி பெற செய்யும். மூலநோய் விரைவில் குணமாகும். தாய்ப்பால் சுரக்க உதவும்  இது முற்றிலும் உதவும்.

Categories

Tech |