Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது மக்கள் கவனத்திற்கு.! தேவையின்றி வெளியே வரவேண்டாம்…. போக்குவரத்து போலீசார் வேண்டுகோள்..!!

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், மிக அவசியமான காரணங்களுக்கு மட்டும் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று  டிராபிக் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அதனுடைய தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தீவிர புயலான மாண்டஸ் வரும் 3 மணி நேரத்தில் புயலாகவ லுவிழக்கும், அதாவது அதனுடைய சீற்றத்தில் இருந்து குறைந்து காணப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் நிலையில் பல்வேறு பகுதியில் கன மழை மற்றும் பல்வேறு இடங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் ட்விட்டர் பக்கத்தில், பொது மக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமேப் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறுப் போக்குவரத்துக் காவல்துறைச் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் சாலையோரம் உள்ள மரங்கள் விழும் சூழல் இருக்கிறது. இதனால் விபத்து ஏதேனும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் போக்குவரத்து போலீசார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |