சுவிட்சர்லாந்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 4 பேர் கொண்ட மலையேறும் குழுவில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள தென்கிழக்கு வாலிஸில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் கொண்ட மலையேறும் குழு ஒன்று சிக்கியுள்ளது. அவ்வாறு சிக்கிய 4 பேரில் மூன்று பேர் எப்படியோ தப்பிய நிலையில் ஒருவர் பரிதாபமாக பனியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட 45 பனி சரிவுகளில் அப்பாவி பொதுமக்கள் சிக்கியுள்ளதாக meteo swiss வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் meteo swiss தற்போது பொதுமக்கள் கவனமாக கவனமாக கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.