சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மக்களுக்காக பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிப்பிடங்கள் மக்களுக்காக இலவசமாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ராயபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களில் 6 பேர் கட்டணம் வசூலித்ததாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், கட்டணம் வசூலிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் இல்லா கழிப்பறைகளில்தான் பொதுக் கழிப்பிடங்கள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.