பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி 26,00,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 92,500 ரூபாயும், கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 70,000 ரூபாயும், அபராதம் விதித்துள்ளது.
மேலும் சென்னையில் 15 மண்டலங்களில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டியவர்களிடம் 13,63,500 ரூபாயும் கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 12,74,500 ரூபாயும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.