கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்துள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பயன்பெற தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என ஆமமுகவினருக்கு கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி. தினகரன் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று தொண்டர்கள் ஆங்காங்கு அப்பணிகளை செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்ட ஆமமுக சார்பில் மன்னார்குடியில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் திரு எஸ். காமராஜ் தலைமையில் கழக நிர்வாகிகள் திறந்து வைத்தனர். பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர கழக செயலாளர் ஆனந்தராஜ், கழக வழக்கறிஞர் விரிவு தலைவர் திரு சீனிவாசன், கழக அம்மா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.