Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் நலன் கருதி…. “6 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கம்”…. கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர்….!!!

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் நலனை கருதி 6 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கத் தொடக்க விழா பொன்னகரம் பேருந்து நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இவர் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். ஜி.கே மணி எம்.எல்.ஏ முன்னிலை வகித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ இன்பசேகரன், அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம், பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா, பொன்னகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, துணைத்தலைவர் வள்ளியம்மாள் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதன்படி 8-ம் நம்பர் பேருந்து பொன்னகரம் – ஏமனூர் வரையும், 741-டி, 742-பி ஆகிய எண் கொண்ட பேருந்துகள் பொன்னகரம் – மேச்சேரி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எண் 1, எண் 9 பேருந்துகள் பொன்னகரம் – நாகப்பட்டினம் வரையும், 7-ம் எண் பேருந்து பொன்னகரம் – முதுகம்பட்டி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதேபோன்று 26 சி எண் கொண்ட பேருந்து பொன்னகரம் – தர்மபுரி வரையும், டி-4 எண் கொண்ட பேருந்து தர்மபுரி – தாசம்பட்டி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. பொதுமக்களின் நலனை கருதி இந்த ஆறு வழித்தடங்களில் நீட்டிப்பு செய்யப்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு ஊர்கள் வழியாக இயங்குகின்றன.

Categories

Tech |