Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து “பூஸ்டர் தடுப்பூசியை போட வேண்டும்” கோரிக்கை விடுத்த அமைச்சர்….!!!!

பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசிகளை போட வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2  தவறை தடுப்பூசி செலுத்தி 75 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் நாட்டின் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அதனால் தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இலவசமாக பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே  பூஸ்டர் டோஸ்   தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே தமிழக மக்கள் அனைவரும் தயங்காமல் முன்வந்து பூஸ்டர் டோஸ்  தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |