Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே உஷார்… உங்கள் லாக்கரை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

வங்கியில் லாக்கர்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது. வங்கியின் லாக்கர்களைப் பொறுத்து அதன் வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 2 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை வாடகை வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவதில், புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாத வாடிக்கையாளர்களின் லாக்கரை உடைக்கும் அதிகாரத்தை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. அதே போன்று வேறு சில விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றத்தின் காரணமாகவோ அல்லது வாடிக்கையாளர்களின் அலட்சியத்தாலோ லாக்கருக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது. வங்கியில் பணிபுரியும் ஊழியர்களால் லாக்கரில் உள்ள பொருளுக்கு ஆபத்து வந்தால், ஓராண்டு வாடகையை போல நூறு மடங்கு தொகையை வாடிக்கையாளர்களுக்கு வங்கி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்து, கட்டிடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்த போன்ற செயல்களுக்கும் வங்கிதான் முழு பொறுப்பு.

அதற்கான இழப்பீட்டை வங்கிதான் வழங்க வேண்டும்.வங்கியின் லாக்கரில் சட்டத்திற்குப் புறம்பான பொருள்களையோ, அபாயகரமான பொருட்களையோ வைக்கக் கூடாது என்பது விதிமுறை. வாடிக்கையாளர்கள் இந்த விதிமுறையை முறையாக பின்பற்ற வேண்டும். வங்கியின் கவனக்குறைவால் பொருட்கள் சேதம் அடைந்தால் வங்கி முழு பொறுப்பேற்கும். இந்த திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வருகின்றது.

Categories

Tech |