பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு எல்லாம் சரியாக கிடக்க வேண்டும் என கட்சியின் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பெரியார் தூண் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் லெனின் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் தடுப்புசிகளை அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு கொரோனா நீதி நிவாரணமான 7, 500 ரூபாய்யையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.