Categories
தேசிய செய்திகள்

பொதுத் தேர்வுகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பொதுத் தேர்வுகளுக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பருவ தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் நடத்த சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசா என்.ஒய்.சி.எஸ்     மாணவர் சங்கத்துடன் இணைந்து குழந்தை உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான அனுபா ஸ்ரீவஸ்தவா  உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில் அனைத்து ஸ்டேட் போர்டு சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் மூலம் நடத்தப்படும்.

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஆஃப்லைன் தேர்வுகள் ரத்து செய்யும்படி இப்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம் காங்வில்கர்  தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மேல் முறையும் நிராகரித்து பின் இதுபோன்ற மனுக்கள் தவறான நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தயாராகும் மாணவர்களுக்கு குழப்பத்தையும் தருவதாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |