Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: ரூ.2,356.67 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் எனவும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்க ரூ.2,356.67 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |