Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. 2.82 லட்சம் பேர் வாங்கல?…. பின்னணி என்ன?…. வெளியான தகவல்….!!!!!

தமிழக்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு, வெல்லம், முந்திரி, மளிகை என்று மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டு, பயனாளிகளுக்கு அவை விநியோகம் செய்யப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களில் மொத்தம் 2.82 லட்சம் நபர்கள் பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு, அதாவது ஜனவரி 4 ஆம் தேதியில் இருந்து பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், பண்டிகை முடிந்த பின்பும் ஜனவரி 31 ஆம் தேதி வரை அவை விநியோகிகக்கப்பட்டு வந்தன. இதனிடையில் பல்வேறு காரணங்களால் தொகுப்பை வாங்க இயலாதவர்கள் அதனை பெற வசதியாக அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை சார்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தகவலின்படி பரிசுத் தொகுப்பை பெற தகுதியான 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களில் 2.12 கோடி பேர் (98.38%) அதனை வாங்கியுள்ளதாகவும், 2.82 லட்சம் நபர்கள் வாங்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அரசு தரும் இலவசங்களை வாங்க விரும்பாதவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு தரம் இல்லை என்று எழுந்த குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் இவ்வளவு லட்சம் பேர் வாங்காமல் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

Categories

Tech |