தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகை வழங்கபடும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்தப் பரிசு தொகுப்பில் ஆவின் நிறுவனம் வழங்கும் 100 மில்லி லிட்டர் நெய் அடங்கும்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக 2,18,00,000 நெய் பாட்டில்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.135 கோடி வருமானம் கிடைக்கும். மேலும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.