கோவையில் கோவில் கும்பாபிஷேக விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொங்கல் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் ரூ.2500 ரொக்க தொகை வழங்கப்பட்டது. அப்போது தற்போதைய முதல்வர் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரினார்.
ஆனால் அவருடைய ஆட்சியில் வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கி ஏழை மக்களை ஏமாற்றிவிட்டார். மேலும் மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மளிகை பொருட்கள் கலப்படம் மற்றும் தரமற்றதாக இருந்துள்ளது. அதேபோல் ரூ.1800 கோடிக்கு பொங்கல் தொகுப்பு என்று கூறிவிட்டு ரூ.1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.