தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை என்றும், தொகுப்பு பொருளில் பல்லி இருந்ததாக கூறியதால் திருத்தணி சேர்ந்த நந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது மகன் குப்புசாமி நேற்று தீக்குளித்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.