Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசுத் தொகுப்பு”…. 500 கோடி ரூபாய் ஊழல்…. பரபரப்பு குற்றசாட்டு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் முதல்வர் முக.ஸ்டாலின் முறைகேடு நடந்ததாக கூறப்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வக்கீல் ஐ.எஸ் இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதால் வெளிமாநில அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் எனவும், பொங்கல் பொருட்கள் தரமற்று இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |