பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் போன்ற மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளன. இதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. ஆகையால் அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாணவர்களுக்கு நாளை முதல் வரும் 15ம் தேதி வரை 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி கூறியுள்ளதாவது, “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை விடுமுறை” என குறிப்பிட்டிருந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடும் மக்கள் தவறாமல் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.