Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை… சிறப்பு பேருந்துகள் முழு விவரம்…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் வழக்கம். பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப, அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கேகே நகர், மாதவரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது.

சென்னையிலிருந்து 176 சிறப்பு பேருந்துகள் உட்பட 2,226 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அரசு விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இன்று 250 ஆம்னி பேருந்துகள், நாளை 410 ஆம்னி பேருந்துகள், நாளை மறுநாள் 460 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தப் பேருந்துகள் சென்னையில் அம்பத்தூர், செங்குன்றம், தண்டையார்பேட்டை, எழும்பூர் மற்றும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |