சென்னைவாசிகள் கடந்த மூன்று வருடங்களாக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஷயம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களால் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2023 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திறப்பு விழா நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமையும் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறைகிறது. இது தவிர சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான ஒப்புதலை பெறுவதற்கான கோப்புகள் கடந்த ஒரு வருடமாக தமிழக அரசிடம் காத்திருந்தது எப்படியும் ஒப்புதல் கிடைத்து கிளாம்பாக்கம் மெட்ரோவை விரைவில் கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இது தவிர புறநகர் ரயில் நிலைய வசதியும் கொண்டுவர திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கான வேலைகளை தெற்கு ரயில்வே உடன் இணைந்து செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமையும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்படும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பேசு பொருளாக மாறி உள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் அருகிலேயே இருப்பதனால் மக்கள் அதிக அளவில் கிளம்பாக்கத்திற்கு இடம்பெயர்வார்கள். இதனால் பல்வேறு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் வணிக வளாகங்களை கொண்டு வர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர கல்வி, சுகாதாரம் போன்றவை தொடர்பான வரவுகளும் வேலைவாய்ப்பு பெருகும் அம்சங்களும் வரும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்ல பேருந்து உதவிகரமாக இருக்கும் மனிதவள மேம்பாட்டு பட்டியலில் படிப்படியாக வளர்ச்சி காணும் என கூறப்படுகிறது.