பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சந்தையில் கரும்பு வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் அருகே தினசரி மார்க்கெட் மற்றும் சனிக்கிழமை வார சந்தை செயல்படுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு வியாபாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கரும்புகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதேபோல் கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வியாபாரிகள் கரும்புகளை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் கரும்பின் தரத்தைப் பொருத்து ஜோடி 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு மழை பொழிவு நன்றாக இருந்ததால் கரும்பு விளைச்சலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.