தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தது. பொங்கல் பரிசு தொகுப்பு மூலமாக சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பல இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதமும், தரமாக இல்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில் தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.