Categories
மாநில செய்திகள்

பொங்கல் சிறப்பு பேருந்து சேவை…. திடீர் மாற்றம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்துகொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு பிறகான சிறப்பு பேருந்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக வருகின்ற 16ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. சிறப்பு பேருந்துகளை 17ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சொந்த ஊரில் இருந்து திரும்ப ஏதுவாக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இயங்குவதாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தற்போது போக்குவரத்து சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதிக்கு முன் பதிவு செய்த தொகை 2 நாட்களில் திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |