பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. 2023ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பேருந்துகளில் பயண கட்டணம் அதிகம் என்பதாலும், பேருந்தை விட ரயில் பயணங்கள் வசதி அதிகம், கட்டணம் குறைவு என்பதால் பலரின் விருப்ப தேர்வாக ரயில் பயணம் உள்ளது. இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 10ம் தொடங்கி பொங்கல் விடுமுறை நாட்களுக்கான முன்பதிவை செப்டம்பர் 12ம் தேதி முதல் IRCTC இணையதளத்தில் செய்து கொள்ளலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை நாட்களின் போது முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். எனவே காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குப்படும் எனவும் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.