Categories
தேசிய செய்திகள்

பையை திருட வந்த நபர்…. தடுத்து நிறுத்திய பிச்சை எடுக்கும் மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் அதிரடி….!!!!

மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் டோபிகாட் பகுதியில் 65 வயதுடைய பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் அசதியில் உறங்கிகொண்டிருந்தார். அப்போது அவரருகே பிச்சை எடுக்க பயன்படுத்தும் பழைய பை ஒன்றையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு நபர் இதை கவனித்துள்ளார். அந்த பையில் நிறைய பணமிருக்கும் என்ற நினைப்பில், யாருக்கும் தெரியாமல் மூதாட்டியிடம் இருந்த பையை அந்நபர் திருட முயன்றுள்ளார்.

அந்த நேரம் மூதாட்டி உறக்கத்தில் இருந்து எழுந்தார். இதையடுத்து அவர் தன் பையை திருடவிடாமல் அந்த நபரை தடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்நபர், மூதாட்டியை அடித்து கடுமையாக தாக்கி இருக்கிறார். இச்சம்பவத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து மும்பை காவல்துறையினர் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். அதன்பின் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அந்நபர் மீது முன்பே பல வழக்குகள் இருக்கிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |