கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீழராஜ வீதியில் சந்தேகப்படும் படியாக பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் மனைவியான சரசு என்பது தெரியவந்துள்ளது.
இந்த மூதாட்டி வைத்திருந்த பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதனை அடுத்து மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.