ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடி 2ஆவது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று புதன்கிழமை சிட்னியில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் 2ஆவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் விளையாடும், இந்தியா வெல்லும் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.. இந்திய அணியில் தனி வீரர்களின் பார்ம் குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில், “எல்லோரும் நன்றாக விளையாடுகிறார்கள், சூர்யகுமார் நல்ல பார்மில் இருக்கிறார், விராட் நல்ல பார்மில் இருக்கிறார்.ரோஹித் தனது சிறந்த ஆட்டத்தை பெறவில்லை, ஆனால் வரும் போட்டி மிகவும் முக்கியமானதாக இருப்பதால் அவர் பார்முக்கு வருவார்.. அவர் ஒரு அற்புதமான வீரர் என்றார்.
மேலும் மொத்த பேட்டிங் வரிசையும், அணியும் திறமையானவர்கள். இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் ஒரு நல்ல ஆட்டத்தை ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் இந்தியா விளையாடும், உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நினைக்கிறேன். , இது அவர்களின் மிகப்பெரிய சோதனை. அரையிறுதியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றால் நிச்சயம் கோப்பையை வெல்வார்கள்’’ என்றார்.
ஐசிசி நிகழ்வுகளில் நியூசிலாந்துடன் இந்தியா உண்மையில் நல்ல வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை. சமீபத்தில், 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் குரூப் ஸ்டேஜில் கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியில் கிவீஸிடம் (நியூசிலாந்து) தோற்றனர். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடமும், 2019 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியிலும் கிவிஸிடம் தோற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | I think India will play New Zealand in the finals and India will win the World Cup. Suryakumar Yadav and Virat Kohli are in great form. The whole team of India is very talented: Former South African cricketer AB de Villiers pic.twitter.com/83tRjI0Fl2
— ANI (@ANI) November 8, 2022