Categories
உலக செய்திகள்

பைடனின் வெற்றி…. இறந்தவங்க ஓட்டு போட்டாங்களா….? எழுந்த புதிய சர்ச்சை…!!

பைடனுக்கு இறந்தவர்களின் பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற்ற நிலையில் 290 வாக்குகளை பெற்ற ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மறுபடியும் நடத்தப்பட்டு வருகின்றது. ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று ஜார்ஜியாவில் கைகளால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆனால் 290 வாக்குகள் பெற்ற ஜோ பைடன் வெற்றி ஜார்ஜியாவின் முடிவால் பாதிப்படையாது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவர் மீது மற்றொரு புகார் எழுந்துள்ளது. தேர்தலில் இறந்தவர்களின் பெயரில் அவருக்கு வாக்களிக்க பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரபல செய்தி நிறுவனமான பாக்ஸ் நியூஸ் செய்தியாளர் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். தேர்தல் நாளன்று இறந்தவர்களின் பெயரில் வாக்கு செலுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கு பைடனுக்கு தான் போடப்பட்டுள்ளது என அந்த செய்தியாளர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக பட்டியல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மின்னஞ்சல் மூலம் செலுத்தப்படும் வாக்குகளில் தான் இந்த மோசடி நடந்திருப்பதாக கூறும் அவர் “இந்த தேர்தலில் அமெரிக்க வாக்கு செலுத்தும் முறையை ஜனநாயகக் கட்சி மாற்றிவிட்டது. இதுவரை தேர்தல் அமைப்பு ஒழுங்கற்றதாக இருந்தது கிடையாது. இது போன்ற சூழ்ச்சிகளும் ஏற்பட்டதில்லை” எனக் கூறினார். அதோடு இத்தகைய மோசடிகளை கண்டு கொள்ளாமல் சிலர் பைடனுக்கு  ஆதரவாக நடந்து கொள்கின்றனர் என பல முன்னணி ஊடகங்கள் சாடியுள்ளது.

Categories

Tech |