போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி கலந்து கொண்டார். இவர் வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அவர்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தினார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது எனவும், இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தார். மேலும் இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை கண்காணிப்பதற்காக காவல்துறை சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.