தலைநகர் டெல்லியில் பஜன் புறா பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது பைக்கை துடைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பை துறைக்கும் துணையாக நாட்டின் தேசிய கொடியை பயன்படுத்தி உள்ளார். அந்த நபர் தனது பைக்கை மடிக்கப்பட்ட தேசியக்கொடி துணியைக் கொண்டு துடைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தான் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை எனவும் இது தவறுதலாக நடந்துவிட்டது எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/Homidevang31/status/1567452618976563202