Categories
மாநில செய்திகள்

பைக் ஓட்டுறது நீ….! பைன் கட்டுறது நானா….? இதை சொல்லி அனுப்புங்க….. காவல்துறை சூப்பர் விழிப்புணர்வு….!!!!

பொதுவாக வாகனத்தை கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடன் கொடுக்கும் வாகனத்தால் சிலர் சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றார்கள். அதனை தடுப்பதற்காக ஈரோடு காவல்துறை ஒரு விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கின்றது. அதில் ஈரோடு காவல்துறை வெளியிட்டிருக்கும் நகைச்சுவை கருத்து படத்தில் கூறப்பட்டிருப்பது பைக் ஓட்டுவது நீ அபராதம் கட்டரது நானா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் என்னோட வண்டியை நீ கேட்கும்போது ஹெல்மெட் போட்டு போக சொன்னேன் கேட்டியா இப்போ செல்போனுக்கு அபராதம் கட்ட சொல்லி எஸ்எம்எஸ் வந்திருக்கு.

வாகன உரிமையாளர் வாகனத்தை மற்றவரிடம் கொடுக்கும் போது விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தவும் என அதில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது வாகனத்தை யாராவது கடன் கேட்டு வாங்கி சென்றால் அவர்கள் சரியாக சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டவும் தலைக்கவசம் அணிவதனை உறுதி செய்து கொள்ளவும் வாகன உரிமையாளரின் கடமை என ஈரோடு காவல்துறை சுட்டிக்காட்டி இருக்கிறது. மேலும் காவல்துறை தனது கடமையை செய்திருக்கிறது. வாகனத்தின் சாவியை பிறரிடம் கொடுக்கும் போது நாம் தான் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் இல்லை என்றால் வாகனத்தை கொடுத்ததற்கு அபராதம் கட்ட தயாராக இருக்க வேண்டும்.

Categories

Tech |