Categories
மாநில செய்திகள்

பைக் ஓட்டிகளே உஷார்…! இதை செய்தால் அவ்வளவு தான்…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் சமீப காலமாகவே பலரும் இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று சாகசங்கள் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது அதிகரித்து வருகிறது என்று  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த ஐந்து வருடங்களில் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டியது, வாகனங்களின் வடிவத்தையும், சைலன்சர்களை மாற்றியும் ஒட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதே போல வாகனங்களை வேகமாக ஓட்டுவது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது. மேலும் இது விபத்துகளுக்கும் வழிவகுக்கும். எனவே வேகமாக வாகனங்களை ஓட்டுவதும், இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பை மாற்றி இயக்குவதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும். எனவே இந்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |