திண்டிவனத்தில் சாலை விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகில் ரோஷனை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் டிரைவர் பாக்யராஜ் (40). இவர் கடந்த 20 ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து கிளியனூர் அருகில் காட்ராம்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் – புதுச்சேரி புறவழிச்சாலையில் ஜெயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் செல்லும்போது எதிர்பாராமல் நிலைதடுமாறி திடீரென்று பைக் கீழே விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டிவனம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.