Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பைக்கின் மீது பயங்கரமாக மோதிய கார்…6 பேர் படுகாயம்…!!!

பைக்கின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் பால கருப்பையா. இவருடைய மகன் நித்தின் பரத். இவர் நேற்று முன்தினம் பைக்கில் முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடிக்கு நான்கு வழி சாலையில் வந்தார். அப்போது பாம்புவிழுந்தான் அருகில் வரும் போது ராமேஸ்வரத்திலிருந்து குருவாயூர் நோக்கி சென்ற கார் நித்தின் பரத் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பரத் பலத்த படுகாயமடைந்துள்ளார்.

மேலும் பைக்கின்  மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து விழுந்தது. இதில் காருக்குள் இருந்த கேரளா மாநிலம் குருவாயூரில் சேர்ந்த 49 வயதுடைய கேசவன், 38 வயதுடைய கமிதா, 15 வயதுடைய அதிரிஜா, 13 வயதுடைய பவித்ரா, 10 வயதுடைய சமாஷா, ஆகிய 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து எமனேஸ்வரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |