Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பைக்காரா அணையில் படகு சவாரி…. குவியும் சுற்றுலா பயணிகள்…. கலை கட்டியது கோடை சீசன்….!!!

சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளி மாநிலங்களிலிருந்தும்,  வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கிருக்கும் ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுவதால் மற்ற இடங்களை விட இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற  பைக்காரா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இந்த படகு சவாரியின் போது இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வனப்பகுதிகளை பார்வையிட்டனர்.

இதனையடுத்து அரசு தாவரவியல் பூங்காவில் அமைந்துள்ள பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஓய்வு எடுத்து மகிழ்ந்தனர். அதன்பிறகு கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இவர்கள் மலர்களுக்கு அருகில் நின்று செல்பியும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, மலை ரயில் சவாரி போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Categories

Tech |