Categories
சற்றுமுன் டெக்னாலஜி தேசிய செய்திகள்

பேஸ்புக்குடன் தகவல் பகிர்வு…. வாட்ஸ் அப் பரபரப்பு அறிக்கை ….!!

நண்பர்கள் குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாத என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சமீபத்தில் அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றி அமைப்பதாக அறிவித்தது.

ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்று பயனாளர்களுக்கு பாப் அப் மெசேஜ் வந்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே மக்கள் மத்தியில் பல குழப்பங்களில் எழுந்து இந்த நிலையில் தற்போது நண்பர்கள் குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

Categories

Tech |