இளம்பெண் ஒருவன் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி அவரது முகத் தோற்றத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நேஹா பாத்திமா என்ற இளம்பெண் கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி அவரது உருவப்படத்தை வரைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது நேஹா பாத்திமாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா! pic.twitter.com/SWKUQZJFfo
— Kamal Haasan (@ikamalhaasan) June 27, 2021
அதில் ‘கோழிக்கோடு நேஹா பாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத்தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய, ஆசிய, அமெரிக்க, சர்வதேச சாதனை புத்தகங்களில் இதற்காக இடம் பெற்றிருக்கிறார். வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். பேர் சொல்லும் பிள்ளை என்பது இதுதானா!’ என பதிவிட்டுள்ளார்.