தமிழக அரசு அறிவித்த சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூராட்சி அவரச கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார் தலைமை தாங்கிய நிலையில் துணை தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்துள்ளார்.
மேலும் கூட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி சொத்துவரி உயர்வு விதிப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அ.தி.மு.க உறுப்பினர்களான ராஜவடிவேல், வாசுகி ஆகிய இருவர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.