Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம்”… தகராறில் ஈடுபட்ட 11 பேர் கைது….!!!!!

பூதப்பாண்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டபொழுது நடந்த தகராறில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் பேரூராட்சிக்கு சொந்தமான பொது வணிக வளாகம் இருக்கின்றது. இங்கு வாடகை தொகையை அதிகரித்து ஏலம் விடப் போவதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டார்கள்.

அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தார்கள். இந்நிலையில் நேற்று காலையில் கடைகள் ஏலம் விடுவதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்பொழுது வணிக வளாகத்தில் கடை நடத்தி வரும் 11 பேர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டார்கள். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து அருகில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார்கள். பாலசுப்ரமணியம் தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதனிடையே கைது செய்யப்பட்ட 11 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Categories

Tech |