தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதில் பேருந்துகள் இயங்கும் அனைத்து வகையான கடைகள் செயல்படும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் பேருந்து சேவை தொடங்க உள்ள நிலையில், சென்னையிலிருந்து முதற்கட்டமாக வகை 2- இல் உள்ள 23 மாவட்டங்களுக்கு 200 பேருந்து சேவைகளை தொடங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதிக கட்டுப்பாடுகள் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். ஒவ்வொரு பேருந்திலும் 50% பயணிகளுக்கு அனுமதி என்றும் குறிப்பிட்டுள்ளது.