பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பி ஆர் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
மேலும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேர்வதற்கு அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்படும். பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிது படுத்த வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.