தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 14ம் தேதி(இன்று ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் விடுமுறையில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் ரூபாய் ஆயிரத்துக்கு பதில் ரூபாய் 2500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்தில் இரு மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து திடீர் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை இணை ஆணையர் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பயணிகளிடம் மீண்டும் ஒப்படைத்தார்.