Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்த பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு அடி-உதை…. பரபரப்பு சம்பவம்…!!

சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பெண் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி பேருந்து நிலையம் அருகே சிலர் மது குடித்துவிட்டு போதையில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பென்னாகரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பெண் குடிபோதையில் இருந்த முதியவரை அடித்து உதைத்துள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததால் அந்த முதியவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |