பயணிகளின் வருகை குறைந்து உள்ள காரணத்தினால் நீண்ட தூர போக்குவரத்திற்கு கணிசமான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றது.
தற்போது உள்ள சூழ்நிலையில் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் நீண்ட தூர போக்குவரத்து கழக பஸ்களில் கணிசமான அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் நீண்டதூர பஸ்களில் 25 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பயணிகள் வரத்து குறைவாக இருந்தால் அதற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.